Saturday, July 23, 2005

ஆத்மா - Soul

மாணிக்கவாசகரை கண்ட குதூகலத்தில் மகாகவியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடார்களோ மக்கள்




சிறிது நாட்களுக்களுக்கு முன்னர், ஓர் தமிழ் வலைப்பூவில் ஓர் நண்பர், இந்த பாடல் தொகுப்பை பற்றி எழுதி இருந்தார். பாரதியார் பாடல்கள் சிலவற்றை, திரைப்படத்திலேயே கேட்டு இரசித்தபின், மற்ற பாடல்களையும், திரைப்பட வடிவம் இன்றி கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இன்று இப்பாடல் தொகுப்பை கேட்க முடிந்தது... கேட்டபின் தோன்றிய முதல் நினைப்புதான், மேலே உள்ள முதல் வரி.

பாரதி என்ற முன்னுரை இன்றி, இளையராஜா என்ற ஓர் முகவரி இருந்திருக்க வேண்டுமோ என்று நினைத்தேன்... 13 பாடல்கள்,

அதில் "காற்றே வா.." பாடலில் "பாம்பே" ஜெயஷ்ரியின் குரல் நம்மை அப்படியே நம்மை பாரதி விவரிக்கும் சூழ்நிலைகே இழுத்துச்செல்லுகின்றது, நல்ல வேளை இசை அதற்குத்தடையாக இல்லை ;-)
எந்த பாடலிலும், இசை என்பது பிண்ணணியில் ஒளிப்பது கூட சில நேரங்களில் மறந்து போய் விடுகின்றது, பாடகியின் குரலும், மொழிக்கு அவர் குடுத்திருக்கும் முக்கியத்துவமே இந்த தொகுப்பின் சிறப்பு.

இளையராஜாவின் (மாணிக்கவாசகரின் ?!) "திருவாசக"-த்திலாவது" என்னைப்போன்ற சில ஞான சூன்யங்களுக்கு, திரைப்படத்தில் ஒலித்த குரலையே நியாபகப்படுத்திக்கொண்டு பாடலை
ரசிக்க விடாமல் செய்தது, அது இந்த தொகுப்பில் இல்லை... ;-)

அங்கங்கே, தமிழ் உச்சரிப்பன்றி அதற்கு இணையான சமஸ்கிருத உச்சரிப்பு இருந்தத்தான் ஏன் என்று புரியவில்லை, ஒரு வேளை பாடகி சமஸ்கிருத பாடல்கள் அதிகம் பாடியதா ?
மொத்தத்தில், பாரதி அனைவரையும் சென்றடைந்து இருக்கவேண்டியது, ஏன் அடையவில்லை என தெரியவில்லை...

ஒரு வேளை கர்நாடக இராகத்தில் பாடியது ஓர் பிழையோ ?!?!
ஆனால்
அதில் தமிழ் பாடல் இருந்ததை அன்பர்கள் கவனிக்கவில்லையோ ??!?!

15 Comments:

Blogger Adaengappa !! said...

Senthil,Thanks for letting me know about Bharatiar songs..
i hope to get this CD soon !!

11:11 PM  
Blogger யாத்ரீகன் said...

கேட்டு மகிழுங்கள், பின் மறக்காமல் சொல்லுங்கள் எப்படி இருக்குது என்று

5:18 PM  
Blogger ioiio said...

I used to be a bigtime bharathi fan..
I am still one :)

2:08 PM  
Blogger யாத்ரீகன் said...

அப்ப நீங்களும் இந்த பாடல் தொகுப்பு முயற்சியை பாரட்டுவீங்கனு நினைகின்றேன், கட்டாயம் கேளுங்க...

6:19 PM  
Blogger TJ said...

Nandri Senthil. Indha thoguppai naan ore aandukku munnare kettu vittein.
Infact, this is now in lot of MP3 sites. Anyway thanks for letting people know.

Abt, sanskrit uchcharippu. Oru mozhikkana vaarthayai adhe ucharippil solvadhu dhaan chirandhadhu endru ennughirein.

தமிழ்நாடு enbadhai தாமில்நாடூ endru matravar koorumpozhudhu evvalavu sangada padughirom. Adhepola சங்கர் enbadhai vida ஷங்கர் endru ucharithal dhaan mozhikku azhaghu.

Panmozhi vithaghar Barathi kooda, samskrita sorkalai, samskrita ucharippileye dhaan uraithiruppar enbadhil enakku sandheghame illai.

12:28 AM  
Blogger Saravana said...

Senthil, Try listening to the Bharathi Movie songs ... they are better than the bombay jayashree version.

Manickavasagar and bharathiar are equally great. no one of them will be forgot by history. even if tamil people ignore them now, its because of their ignorance. they r preserved eternally.

how do you thing thiruvasakam survived a thousand odd years.

9:39 AM  
Blogger யாத்ரீகன் said...

வருகைக்கு நன்றி சரவணக்குமார்,
திரைப்படத்தில் ஏற்கனவே கேட்டிருந்தேன் அப்பொழுதே "நின்னைச்சரணடைந்தேன்.." , "மயில் போல..", "பாரத சமுதாயம்.. " .. போன்ற பாடல்கள் நன்றாகவே இருந்தது..

>>திரைப்படத்திலேயே கேட்டு >>இரசித்தபின், மற்ற பாடல்களையும், >>திரைப்பட வடிவம் இன்றி கேட்டால் >>நன்றாக இருக்கும் என்று >>நினைத்துக்கொண்டிருந்தேன்

மேலே உள்ளதை குறிப்பிட்டிருந்தேனே...
ஆனாலும், இந்த பாடல் தொகுப்பில் இருந்த ஒரு அமைதி அதில் இல்லை, மேலும் இதில் பாடல் வரிகளில் நன்றாக கவனம் செலுத்த முடிந்தது, திரைப்படத்தைப் போன்று திசை திருப்பும் இசை இல்லை என்பது என் கருத்து... :-)

மேலும், இளைய தலைமுறைக்கு அறியப்படாமல், வெறும் வரலாற்றுப்பாடங்களால் மட்டுமே அவர்கள் Eternal-ஆக நம் நினைவுகளால் தங்கி விடக்கூடாது என்பது என் ஆதங்கம்...



மீண்டும் சந்திப்போம்....

10:00 AM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

செந்தில்
வலைத் தளங்களில் எங்கேனும் இந்தப் பாடல்கள் கேட்கக் கிடைக்கிறதா?
இந்தியா போகும் போது தான் வாங்கி கேட்க வேண்டும்.

6:16 PM  
Blogger யாத்ரீகன் said...

www.tamiltorrents.com என்ற தளத்தில், "Atma Soul" என்று தேடுங்கள், கிடைக்கும் Torrent- ஐ , ஏதாவது Torrent Downloader வைத்து Download செய்துகொள்ளலாம்..

6:50 PM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

Thanks Senthil.. Will do the same :-)

3:41 PM  
Blogger Sneha Acharya said...

I have this casette ... Such a brilliant performance by B.Jayshree! .. Naan basicala oru dancerngradhunaala ennala ovvoru pattukkum bhavam kudukka mudindhadhu ... appadi senjappo andha paatukkal innum azhagaaga therindhana.
...mm Thiruvaasagam rasikka neraya thamizh pulamai vendumonnu oru dbt undu enakku. anaa bharadhiya rasikka paamaranaalayum mudiyum... pulavanaalayum mudiyum.

11:16 PM  
Blogger பரஞ்சோதி said...

நன்றி செந்தில்,

நான் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக பாரதியாரின் பாடல்களை கேட்டு வருகிறேன். என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் அதன் சிடியும் காப்பி செய்து கொடுத்திருக்கிறேன்.

நான் அதனை MP3 முறையில் மாற்ற முயற்சிக்கிறேன், பின்னர் கங்கா போன்ற நண்பர்களுக்கு மடலில் அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன்.

கடந்த ஆண்டு பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மற்றொரு இசைத் தொகுப்பை தேடி, கடை கடையாக அலைந்தும் கிடைக்கவில்லை. தற்போது அதன் பெயர் கூட மறந்து விட்டது.

12:32 AM  
Blogger யாத்ரீகன் said...

>>Oru mozhikkana vaarthayai adhe >>ucharippil

பாரதி எழுதியது தமிழ் பாடல்கள் :-D


மேலும் நான் குறிப்பிட்டுருந்த சில உச்சரிப்புகள் சில தமிழ் வார்த்தைகளும் அடக்கம்..

சமஸ்கிருதமே ஆனாலும் சக்தி என்பதை விட ஷக்தி என்று சொல்வதில் முன்பு இருந்த ஓர் அழுத்தமும் சக்தியும் இல்லாதது போல் தோன்றுகிறது.. :-)

பாரதி தன் பாடல்களை சமஸ்கிருத மொழி கலந்து எழுதி இருப்பார் என்பதை என்னை சிறிதளவும் ஒப்புக்கொள்ள முடியவில்லை TJ

இருந்தாலும், சில கோப்புகளை கண்டபின் உங்களுக்கு விளக்கமாக பதிலலிக்கின்றேன்..

7:58 PM  
Blogger யாத்ரீகன் said...

மிகவும் அருமை சிநேகா..

கண்ணன் செய்யும் குரும்புகள்,... போன்ற வழக்கமான வட்டத்திலிருந்து நீங்கள் பாரதியின் பாடல்களுக்கும் நடனம் அமைக்க முயன்றது பாராட்டத்தக்கது.. அதை தொகுப்பாக வெளியிட்டால் நாங்களும் கண்டு மகிழ்வோமே.. :-)

கடைசி வரி மிகவும் அருமையாகச்சொன்னீர்கள்..

8:03 PM  
Blogger யாத்ரீகன் said...

சிறப்பான காரியம் பரஞ்சோதி :-) அந்த நண்பர்களும் கேட்டபின் இதே முறையை பின்பற்றுவார்கள் என வலியுறுத்துங்கள் ;-)

8:36 PM  

Post a Comment

<< Home